உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பி.ஜி., எலெக்ட்ரோபிளாஸ்ட் ஒரே நாளில் 14% சரிவு

 பி.ஜி., எலெக்ட்ரோபிளாஸ்ட் ஒரே நாளில் 14% சரிவு

இ ந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான 'பி.ஜி., எலெக்ட்ரோபிளாஸ்ட்' நிறுவனத்தின் பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்தன. கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் கிட்டத்தட்ட 14.71 சதவீதம் வீழ்ச்சியடைந்து, வர்த்தக முடிவில் 519.60 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த பங்கு கிட்டத்தட்ட 37 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. “தற்போது நிலவும் போர் பதற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனத்துக்கு தேவையான எல்.பி.ஜி., காஸ் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும், இதனால் ஏற்படப்போகும் நிதி பாதிப்பை இப்போதே கணிக்க முடியாது” என்றும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.ஜி., எலெக்ட்ரோபிளாஸ்ட் மட்டுமல்லாது, 'ஆம்பர் என்டர்பிரைசஸ், டிக்சன் டெக்னாலஜிஸ்' போன்ற நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளும் நேற்று 2 முதல் 5 சதவீதம் வரை சரிவை கண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ