மேலும் செய்திகள்
சிறிய ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
27-May-2026
நேற்றைய வர்த்தத்தை இறக்கத்துடன் துவங்கிய நிப்டி, முற்பகலில் 66 புள்ளிகள் வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், நாளின் இறுதியில் 6 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 16 ஏற்றத்துடனும்; 1 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டிமிட்கேப்50' குறியீடு குறைந்தபட்சமாக 0.08 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.55 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. ' நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு மட்டும் 0.04 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 3.05 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,422 நிறுவனங்களின் பங்குகளில் 1,770 ஏற்றத்துடனும்; 1,533 இறக்கத்துடனும்; 119 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி இன்னும் குறுகிய கால சராசரிகளுக்கு மேலேயே வர்த்தகமாகிறது. மொமெண்டம் இண்டிக்கேட்டர்களான எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., ஓரளவுக்கு மீட்சிக்கான வாய்ப்பு இருப்பதையே காட்டுகின்றன. 24,050 வலுவான ரெசிஸ்டென்ஸாக உருவெடுக்கிறது. இதனால், குறிப்பிட்ட வரம்புக்குள் நிப்டி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக தெரிகிறது. 24,050 லெவலை தாண்டி மேலே சென்றால் 24,250 செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இறக்கம் வந்தால் 23,800-ல் நல்லதொரு சர்ப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதைத்தாண்டி இறங்கினால் 23,650 வரை செல்வதற்கான வாய்ப்புள்ளது. ஆதரவு 23,850 23,790 23,745 தடுப்பு 23,975 24,040 24,090
27-May-2026