உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வாடிக்கையாளர் பெயருடன் அஞ்சல் துறை காசோலை

 வாடிக்கையாளர் பெயருடன் அஞ்சல் துறை காசோலை

அ ஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது பெயர், கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., கோடு ஆகியவை அச்சிடப்பட்ட 'பர்சனலைஸ்டு செக் புக்' வசதியை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, கணக்கில் குறைந்தபட்சம் 500 ரூபாய் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் அஞ்சலக கிளைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு, காசோலை வாடிக்கையாளரின் முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும். கூடுதல் காசோலை தேவைப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்; மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; பழைய காசோலை வசதியும் வழக்கம்போல் தொடரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !