கடன் பத்திர சந்தையில் பெண்கள், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க யோசனை
கடன் பத்திர சந்தையில், சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க, செபி புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதன்படி, கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், ராணுவ வீரர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கலாம் என செபி யோசனை தெரிவித்துள்ளது. பொது கடன் பத்திர வெளியீடுகள் சரிவடைந்ததை அடுத்து, செபி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. செபியின் இந்த முன்மொழிவுகள் குறித்து, பொதுமக்கள் நவ.17 வரை தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். செலவினங்களுக்காக பொதுமக்கள் அல்லது வெளிநாடுகளில் அரசு கடன் பெறுவதே, அரசு கடன் பத்திரங்கள்.