உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் ராதாகிஷன் தமானி முதலீடு

லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் ராதாகிஷன் தமானி முதலீடு

கண் கண்ணாடி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ள லென்ஸ்கார்ட், புதிய பங்கு வெளியீடுக்கு வரவுள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 70,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வுக்கு முந்தைய நிதி திரட்டலில், 'டிமார்ட்' நிறுவனரும், பெரு முதலீட்டாளருமான ராதாகிஷன் தமானி, 90 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல், லென்ஸ்கார்ட் நிறுவனத்தில், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனமும், 100 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ