உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / உரிமை கோரப்படாத டிபாசிட்களை மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அறிவுறுத்தல்

உரிமை கோரப்படாத டிபாசிட்களை மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அறிவுறுத்தல்

புதுடில்லி:உரிமை கோரப்படாத டிபாசிட்களை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அதன் உண்மையான உரிமையாளர்கள், நாமினிகள் அல்லது வாரிசுதாரர்களிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

டேர்ம் டிபாசிட்டுகள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில், 10 ஆண்டுகளாக எந்த பணப் பரிவர்த்தனையும் நடைபெறாமல் உள்ளனவும், முதிர்ச்சியடைந்த நிலையிலும் 10 ஆண்டுகளாக திரும்பப் பெறப்படாத டேர்ம் டிபாசிட்களும், உரிமை கோரப்படாத டிபாசிட்கள் எனப்படுகிறது. மொத்த மதிப்பு (ரூ.கோடியில்) 62,070 2 023 மார்ச் 78,213 2024 மார்ச் உயர்வு 26% உரிமை கோரப்படாத முதலீடுகள், வங்கிகளின் பொறுப்பு டிபாசிட் தொகையை திருப்பி வழங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:  வங்கிகளின் கணக்குகளைச் சரிசெய்ய உதவும்  உயிரிழந்த உறவினரின் கணக்குகளைப் பற்றி தெரியாத குடும்பத்தினருக்கு இது உதவும்  பணம் திரும்பக் கிடைப்பதால், வங்கிகளின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் எளிமையாக்கப்பட்ட நடைமுறைகள்  வாடிக்கையாளர்கள் எந்த வங்கி கிளையிலும், வீடியோ வாயிலாக கே.ஒய்.சி., சரிபார்ப்பை செய்து முடிக்கலாம்  உள்ளூர் பகுதிகளில் உள்ள வணிக உதவியாளர்கள் உதவியுடனும், கே.ஒய்.சி.,யை புதுப்பிக்கலாம் 'உத்கம்' என்ற இணையதளம் வாயிலாக, எந்தெந்த வங்கிகளில் தங்களுக்கு உரிமை கோரப்படாத டிபாசிட்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !