வெகுமதி: பேடிஎம் தங்க நாணயம்
பேடிஎம் தங்க நாணயம் @@ப ண்டிகை காலத்தை ஒட்டி, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கும் திட்டத்தை, பின்டெக் நிறுவனமான 'பேடிஎம்' அறிவித்துள்ளது. பேடிஎம் செயலி வாயிலாக ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல், ஆன்லைனில் பொருட்களை வாங்குதல், பணப்பரிவர்த்தனை, ரீசார்ஜ் செய்தல், பில் செலுத்துதல், தானியங்கி முறையில் பணம் செலுத்துதல் ஆகியவற்றோடு, யு.பி.ஐ., டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் இதற்கு தகுதியானவை ஆகும். வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் மொத்த பரிவர்த்தனை மதிப்பில் ஒரு சதவீதத்தை தங்க நாணயமாக பெறலாம். உதாரணமாக, 10,000 ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை மேற்கொள்வோருக்கு 100 தங்க நாணயங்கள் பரிசாக கிடைக்கும். 100 தங்க நாணயங்கள் என்பது ஒரு ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் தங்கத்துக்கு சமமாகும்.