உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு

 முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 54 காசு குறைந்து, இதுவரை இல்லாத அளவாக 96.35ஆக சரிந்தது. வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு 96.39 என்ற அளவிற்கு சென்று சற்று மீண்டது.

சரிவுக்கான காரணங்கள்:

1. மேற்காசிய போர் பதற்றங்கள் 2. கச்சா எண்ணெய் விலை உயர்வு 3. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பது 4. அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் அதிகரித்து வருவது 5. இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவது நம்பிக்கை அளிக்கும் அரசின் நடவடிக்கை தற்போதைய புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், ரூபாய்க்கு பாதிப்பு இருந்தாலும், நிலைமை கையை மீறி செல்வதற்கு முன்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முன்கூட்டியே தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியிருப்பது சந்தைக்கு நம்பிக்கையளிக்கும் விஷயமாகும். வரும் நாட்களில், 94.80 - 95.20 என்பது ரூபாய் மதிப்புக்கு ஆதரவு நிலையாக இருக்கும். குறுகிய காலத்தில், 96.40 - 96.50 என்பது வலுவான தடை நிலையாக இருக்கும் -அமித் பபாரி, நிர்வாக இயக்குநர் சி.ஆர்., போரக்ஸ் அட்வைசர்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ