உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி.,க்கு செபி அனுமதி

 ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி.,க்கு செபி அனுமதி

சொ த்து மேலாண்மை நிறுவனமான, 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளியீடு என்பது ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் விற்பனை செய்யும் 'ஆபர் பார் சேல்' வகையைச் சேர்ந்தது. இதில், இங்கிலாந்தில் உள்ள கூட்டு நிறுவனமான புருடென்ஷியல் பி.எல்.சி., தனது 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இதன் மதிப்பு, கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் வரை இருக்கும். திரட்டப்படும் தொகை, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லாமல், புருடென்ஷியல் நிறுவனத்திற்கே செல்லும். ஒழுங்குமுறை செயல்முறைகள் முடிந்தவுடன், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஐ.பி.ஓ., வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !