மீண்டும் உச்சத்தில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில், வெள்ளி விலை இதுவரை இல்லாத ஏற்றம் கண்ட நிலையில், இந்தியாவில் எம்.சி.எக்ஸ்., சந்தையிலும் அதன் விலை சாதனை அளவை தொட்டது.உலகளவிலான அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்குவது மற்றும் இ.டி.எப்., பண்டுகள் அதிகளவில் முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி விலை இந்த ஆண்டில் அதிகளவு ஏற்றம் கண்டுள்ளன.இந்நிலையில், தொழில் துறையில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நம் நாட்டில் அதிகளவில் வெள்ளி வாங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.