உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வேகம் குறைந்த ஐ.பி.ஓ., சந்தை

 வேகம் குறைந்த ஐ.பி.ஓ., சந்தை

நடப்பு 2026ம் ஆண்டில் ஐ.பி.ஓ., வெளியீடு சற்று மந்தமாக உள்ளதாக 'எக்குயிரஸ் கேபிட்டல்' நிறுவன ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது *நடப்பாண்டில் இதுவரை 23 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன *கடந்த 2025ம் ஆண்டில், 103 நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வாயிலாக 1.76 லட்சம் கோடி ரூபாய் திரட்டியிருந்தன *செபியின் ஒப்புதல் மற்றும் பரிசீலனையில் , மேலும் 236 நிறுவனங்களின் ஐ.பி.ஓ., விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன *அன்னிய முதலீடுகள் குறைந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு வாயிலாக முதலீடு செய்வதால், பங்குச்சந்தை வலுவாக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை