12 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் ஸ்மால் அண்டு மிட்கேப் குறியீடுகள்
க டந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஏப்ரல் மாதத்தில், 'பி.எஸ்.இ., ஸ்மால் அண்டு மிட்கேப்' பங்குகள், மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. கடந்த மார்ச் காலாண்டு வருவாய் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, 2025ல் ஏற்பட்ட சரிவுக்கு பின், பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைத்தது, இந்த உயர்வுக்கு முக்கிய கார ணங்களாக கூறப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில், 'பி.எஸ்.இ., ஸ்மால்கேப்' குறியீடு 20.10 சதவீதமும், 'மிட்கேப்' குறியீடு 14.80 சதவீதமும் உயர்வு 2014 மே மாதத்தில்தான், இந்த அளவிலான உயர்வு காணப்பட்டது 'ஸ்மால்கேப்' குறியீட்டில் உள்ள 1,262 பங்குகளில், 734 பங்குகள் 20 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை வழங்கியுள்ளன இதில், 84 பங்குகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. எச்சரிக்கையும் கணிப்புகளும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல் போன்ற காரணங்களால் சந்தையில் வரும் மாதங்களில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்க வாய்ப்பு நிப்டி 23,800 நிலைக்கு கீழே சென்றால் மேலும் சரிவடையக்கூடும் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 125 டாலருக்கு மேல் நீடித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு 97 வரை சரிய வாய்ப்பு ரூபாயின் மதிப்பை பொறுத்தவரை 94.80 என்பது முக்கிய ஆதரவு நிலை. இவ்வாறு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.