உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  நிப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானம் கவர்ச்சிகரமாகும் ஸ்மால்கேப் பங்குகள்

 நிப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானம் கவர்ச்சிகரமாகும் ஸ்மால்கேப் பங்குகள்

க டந்த மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு வரை, 'நிப்டி50' குறியீட்டை விட 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு அதிக வருமானம் கொடுத்துள்ளது. தொழில் அடிப்படைகளில் முன்னேற்றம், வருமான வளர்ச்சிக்கான வாய்ப்பு, நியாயமான மதிப்பீடு போன்ற காரணங்களால், ஸ்மால்கேப் பங்குகள் கவர்ச்சிகரமான புள்ளியை நெருங்குவதாக பஜாஜ் பின்சர்வ் ஏ.எம்.சி., நிறுவனம் கூறுகிறது. கவனிக்க வேண்டியவை  ஸ்மால்கேப் நிறுவனங்களின் அடிப்படைகளில் முன்னேற்றம்; சொந்த நிதியிலேயே தொழில் விரிவாக்கம் செய்வதால், நிதிநிலை மேம்படுகிறது

 மூலதன செலவு 2019 - 2022 காலகட்டத்தில் 2.20 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2024 - 2026 காலகட்டத்தில் 3.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு  நிகர கடன் - ஈக்விட்டி விகிதம் 2018 - 2019ம் நிதியாண்டில், 0.52ல் இருந்து 2025 - 2026ம் நிதியாண்டில், கிட்டத்தட்ட சுழியத்தை நெருங்கிவிட்டது  அதே காலகட்டத்தில் மூலதனத்தின் மீதான வருமானம் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு  ஸ்மால்கேப் நிறுவனங்களில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு அதிகரிப்பு  50 சதவீத ஸ்மால்கேப் பங்குகள் 10 ஆண்டு சராசரி மதிப்பை விட குறைவாக வர்த்தகமாகின்றன  வரலாற்று ரீதியாகவே, சந்தை சரிவில் இருந்து மீளும் காலங்களில், ஸ்மால்கேப் பங்குகள் அதிக வளர்ச்சி கண்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ