உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  17 ஆண்டு சரிவில் தென்கொரிய கரன்சி

 17 ஆண்டு சரிவில் தென்கொரிய கரன்சி

ம த்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பற்ற முதலீடுகளை தவிர்க்க துவங்கியுள்ளனர். இதன்விளைவாக, தென் கொரிய பங்கு சந்தையும், அந்நாட்டின் கரன்சி மதிப்பும் வீழ்ச்சியடைந்து ள்ளன. நேற்றைய வர்த்தகத்தில், தென் கொரியாவின் முக்கிய பங்கு சந்தை குறியீடான 'கோஸ்பி' 6.50 சதவீதம் சரிந்து, கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச நிலையை எட்டியது. அதேபோல, அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டின் கரன்சியான 'வொன்' மதிப்பு 1,517.3ஆக வீழ்ச்சியடைந்தது. இது 2009ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 17 ஆண்டுகளில் பதிவான மிக மோசமான சரிவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !