உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்:  கரெக் ஷன் முடிவுக்கு வருவதை போல் தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்:  கரெக் ஷன் முடிவுக்கு வருவதை போல் தெரிகிறது

நாள் முழுவதுமே சிறிது சிறிதாக இறக்கத்தை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 133 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 1.50 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 0.22 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் இறக்கத்துடனும்; 2 குறியீடுகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு, அதிகபட்சமாக 0.38 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,241 பங்குகளில், 1,113 ஏற்றத்துடனும்; 2,033 இறக்கத்துடனும்; 95 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கரெக்ஷன் நிறைவடைவதைப் போன்ற தோற்றம் தென்படுகிறது. நிப்டியின் ஆர்.எஸ்.ஐ., 50-க்கு மேல் உள்ளது. எம்.ஏ.சி.டி.,-யும் மேல்நோக்கிய பயணத்திற்கான ஆரம்ப கட்டத்தை காட்டுகிறது. 25,640-க்கு மேலேயே இருக்கும் பட்சத்தில், 25,800- - 25,900 வரையில் சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. செய்திகள் பாதகமாக இருந்தால், நிப்டி 25,300 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி