உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் மேலும் தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் மேலும் தொடர வாய்ப்புள்ளது

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 25,181.95 25,365.15 25,159.35 25,323.55 நிப்டி பேங்க் 56,528.95 56,922.70 56,491.85 56,799.90

நிப்டி ஆரம்பத்தில் ஏற்றத்தை சந்தித்த நிப்டி, 10:00 மணிக்கு மேல் ஜிவ்வென்று மேலே கிளம்பி, நாளின் இறுதியில் 178 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 16- குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி நெக்ஸ்ட் 50' அதிகபட்சமாக 1.33% ஏற்றத்துடனும்; நிப்டி குறைந்தபட்சமாக 0.71% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 16 ஏற்றத்துடனும், ஒன்று இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி ரியால்ட்டி' அதிகபட்சமாக 3.04% ஏற்றத்துடனும்; நிப்டி பார்மா குறைந்தபட்சமாக 0.08% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மீடியா' குறியீடு மட்டும் இறக்கத்துடன் நிறைவடைந்திருந்தது. வர்த்தகம் நடந்த 3,189 பங்குகளில், 1,979 ஏற்றத்துடனும்; 1,125 இறக்கத்துடனும்; 85 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக தற்போது நிப்டி ஏற்றம் காணும் சாதகமான சூழலில் உள்ளது. மேலும் முக்கிய 'எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ்'களுக்கு மேல் இருப்பது, தொடர்ந்து, சிறிய ஏற்றத்தை காண வாய்ப்பு உள்ளது என்பதை காட்டுகிறது. 25,300-க்கு மேலேயே வர்த்தகமாகி நிலைத்திருந்தால், 25,485 வரையில் செல்லும் வாய்ப்பு உள்ளது. 25,150-க்குக் கீழே சென்றால், சிறிய அளவில் சரிவு ஏற்படலாம். மொத்தத்தில், 'டெக்னிக்கல் அவுட்லுக்' சிறிது ஏற்றம் வர வாய்ப்புள்ளது என்பதையே காட்டுகிறது. ஆதரவு 25,190 25,070 24,990 தடுப்பு 25,400 25,475 25,560 Galleryநிப்டி பேங்க் ஆரம்பத்தில் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி பேங்க், அதன்பின் ஆரம்ப நிலைக்கு திரும்பி, மீண்டும் வேகமான ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 303 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. முக்கிய 'எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ்'களுக்கு மேலேயே நிறைவடைந்துள்ளபடியால், ஓரளவுக்கு ஸ்திரமான ஏற்றப்பாதையில் வந்தமர்ந்துள்ளது. மொமெண்டம் பாசிட்டிவ்வாக இருந்தாலும், ஆர்.எஸ்.ஐ., சற்று 'ஓவர்பாட்' நிலைக்கு அருகில் இருப்பதால், ஏற்றப்பாதையில் ஒரு சிறிய இடைவேளை எப்போது வேண்டுமென்றாலும் வர வாய்ப்புள்ளது. 56,740-க்கு கீழே செல்லாமல் வர்த்தகமானால் மட்டுமே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. 57,000க்கு மேல் வால்யூமுடன் ஏற்றம் நடந்தால், நல்லதொரு ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு செய்திகள் சாதகமாக இருக்க வேண்டும். ஆதரவு 56,550 56,300 56,140 தடுப்பு 56,980 57,155 57,325 நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எட்டர்னல் 355.40 7.65 3,08,40,496 59.77 டாடா மோட்டார்ஸ் 391.90 -3.55 2,69,53,559 38.39 எச்.டி.எப்.சி., பேங்க் 978.50 1.35 2,33,10,447 68.34 ஐ.டி.சி., 400.30 3.50 1,60,43,867 77.06 டாடா ஸ்டீல் 173.00 2.49 1,50,31,989 45.68 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எஸ் பேங்க் 23.37 0.05 9,19,90,161 35.79 சுஸ்லான் எனர்ஜி 53.93 -0.02 5,67,03,266 60.72 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 72.97 0.17 2,00,15,593 66.63 என்.எம்.டி.சி., 76.70 0.57 1,62,67,362 65.17 என்.எச்.பி.சி., 87.13 1.77 1,23,47,959 52.19 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) சி.இ.எஸ்.சி., 176.20 8.77 97,66,959 50.46 ஐநாக்ஸ் விண்டு 148.58 1.38 67,39,763 50.17 என்.பி.சி.சி., 111.56 1.72 66,08,121 32.09 பந்தன் பேங்க் 163.42 0.83 53,80,906 48.77 இந்தியா எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 135.85 -0.24 48,02,387 39.19 நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை அஸ்ட்ரால் லிட். 1,437.90 50.93 5,58,872 கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ் 2,132.00 33.31 10,19,818 எல்.டி., புட்ஸ் 411.50 38.25 11,27,024 ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் 303.30 43.40 35,64,186 என்.சி.சி., 211.49 29.73 40,70,404


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை