உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: குழப்பமான டெக்னிக்கல் சூழலே தென்படுகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: குழப்பமான டெக்னிக்கல் சூழலே தென்படுகிறது

காலையில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 116 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.இவற்றில் 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 0.49 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.18 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.இவற்றில் 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.68 சதவீத ஏற்றத்துடனும் நிப்டி ஐ.,டி., குறியீடு அதிகபட்சமாக 0.98 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,248 பங்குகளில், 1,520 ஏற்றத்துடனும்; 1,621 இறக்கத்துடனும்; 107 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் மொமெண்டம் இண்டிகேட்டர்கள் (ஆர்.எஸ்.ஐ., 48-க்கு அருகிலும், பிளாட்டான எம்.ஏ.சி.டி.,யும்) பெரிய மாற்றம் வர வாய்ப்பு குறைவான அல்லது சற்று இறக்கம் வரக்கூடிய டெக்னிக்கல் சூழலையே காட்டுகின்றன.தற்போதைய நிலைமையில், நிப்டியின் குறுகிய கால ரெசிஸ்டென்ஸ் 25,700 மற்றும் 25,800-ல் உள்ளது, சப்போர்ட் 25,500 மற்றும் 25,320-ல் உள்ளது. செய்திகள் சாதகமாக இருந்து, நிப்டி 25,800-க்கு மேலே சென்று நிலைத்திருந்தால், 26,000 என்ற லெவலை நோக்கி செல்லக்கூடும். அதேநேரம் 25,500-க்கு கீழ் சென்றால் 25,320 வரை செல்வதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை