டெக்னிக்கல் அனாலிசிஸ் : திசை தெரியா நிலை உருவாகக்கூடும்
சிறிய ஏற்ற இறக்கங்களுடன் 11:45 மணி வரை நடந்த நிப்டி, அதன் பின்னர் இறங்க ஆரம்பித்து, அடுத்து சற்று மீண்டு, நாளின் இறுதியில் 57 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால் கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.87 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு அதிகபட்சமாக 0.34 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.78 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி கன்ஸ்யுமர் டியுரபிள்ஸ்' குறியீடு, அதிகபட்சமாக 0.89 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.