டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறங்கும் டிரெண்டில் சிறியதொரு இளைப்பாறுதல்
நிப்டி நேற்று 66 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, வர்த்தகத்தின் இடையில் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு, நாளின் இறுதியில் 86 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும், 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி 100 குறியீடு' அதிகபட்சமாக 0.20 சதவீதம் சரிந்தும், ' நிப்டி ஸ்மால்கேப் 50 குறியீடு' அதிகபட்சமாக 0.41 சதவீதம் உயர்ந்தும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் அதிகரித்தும், 6 குறியீடுகள் வீழ்ச்சியுடனும் முடிந்தன. இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி குறியீடு' அதிகபட்சமாக 1.41 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் எக்ஸ் - பேங்க் குறியீடு' அதிகபட்சமாக 0.65 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.