டெக்னிக்கல் அனாலிசிஸ்: எச்சரிக்கையுடன் கூடிய பாசிட்டிவ் மனநிலை தென்படுகிறது
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 25,593.35 25,679.15 25,491.55 25,509.70 நிப்டி பேங்க் 57,714.80 57,945.05 57,521.00 57,554.25 நிப்டி ஆரம்பத்தில் சிறிது நேரம் ஏற்றத்தை சந்தித்த நிப்டி, தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 87 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி குறியீடு, குறைந்தபட்சமாக 0.34% இறக்கத்துடனும்; நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 1.69% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 2 ஏற்றத்துடனும்; 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி ஐ.டி., 0.18% ஏற்றத்துடனும்; நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு குறைந்தபட்சமாக 0.19% இறக்கத்துடனும்; நிப்டி மீடியா குறியீடு அதிகபட்சமாக 2.54% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,195 பங்குகளில் 794 ஏற்றத்துடனும்; 2,304 இறக்கத்துடனும், 97 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக நிப்டியில் குறுகியகால இறக்கம் வந்துபோவதற்கான ஆரம்ப சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துள்ளன. சமீபத்திய இறக்கம் கன்சாலிடேஷனா அல்லது டிரெண்ட் ரிவர்சலா என்பதை உறுதி செய்ய, இன்னும் இரண்டொரு நாட்களாகும். எச்சரிக்கையுடன் கூடிய பாசிட்டிவ் மனநிலையே நிப்டியில் தெரிகிறது. ஆதரவு 25,435 25,365 25,295 தடுப்பு 25,620 25,735 25,810 நிப்டி பேங்க் நிப்டி பேங்க், ஆரம்பத்தில் மிகக்குறைந்த நேரம் ஏற்றத்தை சந்தித்து, பின் இறக்கம் மற்றும் இறக்கத்தில் இருந்து மீள்தல் போன்றவை மட்டுமே நடந்து, நாளின் இறுதியில் 272 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. டெக்னிக்கலாக கொஞ்சம் ஓய்வெடுத்த பின்னரே ஏற்றம் தொடரவாய்ப்புள்ளது என்ற நிலைமை தென்படுகிறது. மீண்டும் ஏற்றம் வந்தாலும்கூட, அதன் உறுதித்தன்மையை ஊர்ஜிதம் செய்ய, ஓரிரு நாட்கள் கூட ஆகலாம். ஆதரவு 57,395 57,235 57,075 தடுப்பு 57,815 58,085 58,250 நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எட்டர்னல் 305.30 -8.20 4,47,25,332 61.62 ஹிந்தால்கோ 786.55 -44.85 3,47,86,635 60.11 ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,320.30 -16.60 2,42,21,853 72.30 டாடா ஸ்டீல் 177.35 -1.94 2,36,64,538 59.65 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 959.85 2.25 2,30,88,096 58.03 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) சுஸ்லான் எனர்ஜி 59.50 -0.49 14,72,35,071 37.56 எஸ் பேங்க் 22.62 -0.40 7,83,61,962 42.02 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 80.25 -0.88 3,47,75,868 65.32 அசோக்லேலண்ட் 140.40 -0.04 1,74,35,511 43.44 என்.எச்.பி.சி., 82.80 -1.36 1,58,81,779 39.53 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ரெடிங்டன் லிட் 287.15 36.90 8,80,99,906 9.42 டெல்ஹிவரி 436.40 -48.45 2,06,71,252 50.26 பிரமல் பார்மா 200.60 0.18 1,47,05,456 28.84 பந்தன் பேங்க் 153.01 -3.15 1,29,78,521 56.41 மணப்புரம் பைனான்ஸ் 274.00 7.55 95,29,258 44.74 நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை எல்.டி., புட்ஸ் லிட் 406.00 49.56 7,93,888 ஆயில் இந்தியா 433.15 58.29 13,00,076 ஏ.யு., ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 881.00 70.69 35,39,271 டாபர் இந்தியா 523.15 39.73 39,11,239 இண்டஸ் டவர்ஸ் 399.00 55.56 1,42,37,144 *****