டெக்னிக்கல் அனாலிசிஸ் :24,250க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்கலாம்
நண்பகல் வரை ஏற்றம் அதன் பின், 2:45 மணிவரை இறக்கம் பின், 3 மணியளவில் சிறிய ஏற்றம் என, பல மாறுதல்களை கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 34 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி100 குறியீடு குறைந்தபட்சமாக, 0.07 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 1.18 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடனும், 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி பிரைவேட் பேங்க் குறியீடு அதிகபட்சமாக 0.56 சதவீத இறக்கத்துடனும், நிப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 1.53 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.