மேலும் செய்திகள்
அதிமுகவையே பின்னுக்கு தள்ளி விடுமா தவெக?
30-Apr-2026
நிப்டி நேற்று நிப்டி 179 புள்ளிகள் அதிகரித்து துவங்கியது. ஆனால், வர்த்தகத்தின் இடையே அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில், நாளின் இறுதியில் 4 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும், 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.10 சதவீத உயர்வுடனும், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.26 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும், 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில, 'நிப்டி சிமென்ட்' குறியீடு அதிகபட்சமாக 2.41 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட் ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.68 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
30-Apr-2026