டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 23,300ஐ தாண்ட முடியாமல் தடுமாறுகிறது
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 23,259.05 23,279.40 23,104.45 23,242.10 நிப்டி நேற்று 136 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. முற்பகலில் சற்று இறங்கினாலும் நாளின் இறுதியில் 119 புள்ளிகள் உயர்வுடனே முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 1.86 சதவீதமும், 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.68 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடு ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 3.62 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.48 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,396 நிறுவனங்களின் பங்குகளில் 2,380 ஏற்றத்துடனும்; 904 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.