உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் :  சப்போர்ட் லெவலுக்கு அருகே போராடும் நிப்டி

டெக்னிக்கல் அனாலிசிஸ் :  சப்போர்ட் லெவலுக்கு அருகே போராடும் நிப்டி

நேற்றைய வர்த்தகத்தில் 110 புள்ளிகள் இறங்கி துவங்கிய நிப்டி, மதியவேளையில் 107 புள்ளிகள் வரை உயர்ந்தது. இருப்பினும், நாளின் இறுதியில் 53 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் முடிவடைந்தன. இவற்றில, 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 0.37 சதவீதமும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.12 சதவீதமும் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.78 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.62 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,362 நிறுவனங்களின் பங்குகளில், 1,013 ஏற்றத்துடனும்; 2,255 இறக்கத்துடனும்; 94 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

Galleryஎன்ன முயன்றாலும் நிப்டியால் ஏற்றத்தை தொடர முடியவில்லை. முக்கிய குறுகியகால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்திருப்பதால், குறுகியகாலத்தில் நிப்டி பலவீனமாகவே இருக்கிறது என்பது தெளிவாக தென்படுகின்றது. மொமெண்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., போன்றவையும் பியரிஷாக இருப்பதையே காட்டுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் 23,000த்தில் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைத்தாண்டி இறங்கினால் 22,800 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 23,345ஐ கடந்தால் மட்டுமே 23,500 நோக்கி மீட்சி வரக்கூடும். இவை அனைத்தையும் வைத்துப்பார்த்தால், பலவீனமான நிலையில் சப்போர்ட் அருகே நிப்டி போராடுகிறது என்பது தெரிகிறது. தற்போதைய சூழலில் குறுகிய வரம்பிற்குள் திசையற்ற நகர்வு தொடரும் வாய்ப்பு அதிகரித்துள்ள போதிலும், 23,345ஐ கடந்து செல்லாத வரை பலவீனமான நிலைமை தொடரக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
ஜூன் 12, 2026 10:56

மேற்காசியப்போர் மட்டும் காரணமல்ல ..... அந்நிய முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவதும் கூடக் காரணங்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை