மேலும் செய்திகள்
சிறிய ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
27-May-2026
மீண்டும் Finals-க்கு சென்ற GT
30-May-2026
நேற்று 11 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி நாள் முழுவதுமே ஏற்ற இறக்கங்கள் பலவற்றை சந்தித்தது. பின்னர், மூன்று மணிக்கு மேல் சீரான உயர்வு கண்டு நாளின் இறுதியில் 82 புள்ளிகள் அதிகரித்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.67 சதவீதமும், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு குறைந்தபட்சமாக 0.32 சதவீதமும் ஏற்றத்துடன் காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி500 ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவீத உயர்வுடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.19 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 'நிப்டி ஆயில் & கேஸ்' குறியீடு மட்டும் மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது.
27-May-2026
30-May-2026