உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் : சந்தையில் மேலும் சற்று ஏற்றம் தொடரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சந்தையில் மேலும் சற்று ஏற்றம் தொடரலாம்

நிப்டி

நா ளின் ஆரம்பத்தில் ஏற்றத்துடன் 25,441- புள்ளிகளில் துவங்கிய நிப்டி, தொடர்ந்து சிறுசிறு இறக்கங்களை சந்தித்து, 25,329 என்ற குறைந்தபட்ச அளவை சந்தித்து, பின் இறுதியில் 93 புள்ளிகள் ஏற்றத்துடன், 25,423ல் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):73.11 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):3.43 என இருப்பது, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்பதைப் போன்ற நிலையே தென்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் 25,315 என்ற நிலை மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நிலைக்கு கீழே சென்றால், சற்று இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 25,355, 25,285 மற்றும் 25,235 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,470, 25,520 மற்றும் 25,560 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.

நிப்டி பேங்க்

Gallery வ ர்த்தகத்தின் ஆரம்பத்தில் ஏற்றத்துடன் 55,797- புள்ளிகளில் ஆரம்பித்த நிப்டி பேங்க், பின்னர் 55,835 என்ற உச்சத்தை தொட்டுவிட்டு, அடுத்து 55,490 என்ற குறைந்தபட்ச அளவை அடைந்து, அதைத் தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 234 புள்ளிகள் ஏற்றத்துடன் 55,727- புள்ளிகளில் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):215.19, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 62.67. மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 3.85 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் தொடர்வதற்கு, 55,685 என்ற அளவுக்கு கீழே போகாமல் வர்த்தகம் நடக்க வேண்டும். 55,535, 55,345 மற்றும் 55,210 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும் 55,875, 56,030 மற்றும் 56,160 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ