UPDATED : பிப் 24, 2026 01:49 AM | ADDED : பிப் 24, 2026 01:44 AM
காலையில் ஏற்றத்தில் ஆரம்பித்து நடைபெற்ற நிப்டி, பிற்பகல் 2:00 மணியளவில் ஏற்றம் கண்ட புள்ளிகளில் சிலவற்றை இழந்து அதன்பின் மீண்டும் வேகமான ஏற்றம் கண்டு நாளின் இறுதியில், 141 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.இவற்றில் 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.53 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.83 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில்; 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.36 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட் ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம்' குறியீடு, அதிகபட்சமாக 1.50 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,278 பங்குகளில் 1,494 ஏற்றத்துடனும்; 1,672 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) சற்று மேலே வர்த்தகமாகிறது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் சிறியதொரு ஏற்றத்துக்கான சூழலை காட்டுகின்றன.டெக்னிக்கலாக ஏற்றத்துடன் கூடிய கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது. நிப்டி 25,650-க்கு மேல் இருக்கும் வரை ஏற்றம் தொடரவே வாய்ப்புள்ளது. 25,750-க்கு மேலே செல்லும் பட்சத்தில், 26,000 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.