மேலும் செய்திகள்
23,750ஐ கடந்தால் மட்டுமே ஏற்றத்துக்கு வாய்ப்பு
02-Jun-2026
நேற்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே நிப்டி இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தக நிறைவில், 154 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.80 சதவீத உயர்வுடனும் 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.58 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும்; நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.13 சதவீதம் அதிகரித்தும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.65 சதவீதம் குறைந்தும் முடிவடைந்தன. 154 புள்ளிகள் இறக்கத்துக்கு பின்னருமே டெக்னிக்கலாக பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை.
02-Jun-2026