உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது

நேற்று 15 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 3 மணி வரை சிறுசிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து பின்னர் நாளின் இறுதியில் 46 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ல் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.08 சதவீத உயர்வுடனும், 'நிப்டிமிட்கேப்150' குறியீடு அதிக பட்சமாக 0.38 சதவிகித சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 குறியீடுகள் இறக்கத்துடனும் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 0.55 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., & டெலிகாம்' குறியீடு அதிக பட்சமாக 0.77 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,666 நிறுவனங்களின் பங்குகளில் 1,466 ஏற்றத்துடனும்; 2,077 இறக்கத்துடனும்; 123 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி மீண்டும் அனைத்து முக்கிய சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு கிளவுடுக்கு கீழே நிறைவடந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் அதிக அளவில் ஓவர்சோல்டு என்ற டெக்னிக்கல் நிலையில் இருப்பதை காட்டுகிறது. 23,380 உடனடி சப்போர்ட்டாக இருக்கிறது.

Gallery இதற்கு கீழே சென்றால் இறக்கம் தொடரலாம். உடனடி ரெசிஸ்டென்ஸ் 23,700-23,770ல் இருக்கிறது. இவற்றை தாண்டி ஏற்றம் கண்டாலுமே 23,960-24,030ல் வலுவான ரெசிஸ்டென்ஸை நிப்டி சந்திக்க வேண்டியிருக்கும். டெக்னிக்கலாக ஓவர்சோல்டு நிலமை இருப்பதால் சிறியதொரு ஏற்றம் வர வாய்ப்புள்ளது. அப்படி ஏற்றம் வந்தாலுமே 23,700ஐ தாண்டாதவரை டெக்னிக்கலாக ஏற்றம் நிலைத்திருக்கும் என்பதற்கான உறுதி ஏதுமில்லை. எனவே, தற்போதைய சூழலில் திசைதெரியா நிலை உருவாக வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி