ஐ.பி.ஓ., சந்தையை அதிர வைத்த மசாலா நிறுவனம்
ஜெய்ப்பூரை சேர்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனம், 38.5 கோடி ரூபாய் நிதி திரட்ட வெளியிட்ட ஐ.பி.ஓ.,விற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 'ஷியாம் தானி இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், கடந்த டிசம்பர் 22ம் தேதி, எஸ்.எம்.இ., பிரிவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது. டிசம்பர் 24ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக இருந்த நிலையில், இந்நிறுவன பங்குகளை வாங்க 988 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக தரவுகள் கூறுகின்றன. நடப்பாண்டில், எஸ்.எம்.இ., பிரிவில் அதிகம் விண்ணப்பிக்கப்பட்ட ஐந்தாவது நிறுவனம் இது. இந்நிறுவன பங்குகள் வரும் 30ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.