மேலும் செய்திகள்
உலக கோப்பை கிரிக்கெட்: 70 வயது விவசாயி தேர்வு
1 hour(s) ago
இன்னும் 2 மாதங்களில் சென்னையில் ஏர் டாக்ஸி சோதனை
8 hour(s) ago | 1
இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா!
12 hour(s) ago | 16
நிப்டி ஆரம்பத்தில் ஓரள வு ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 12 மணியளவில் இறங்க ஆரம்பித்து, பின்னர் இறக்கத்தில் இருந்து மீள முயற்சித்து முடியாமல் இருந்தது. ஆனால், நாளின் இறுதியில் 27 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 4 ஏற்றத்துடனும், 9 இறக்கத்துடனும் 2 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மைக்ரோகேப்250 குறியீடு 0.18 சதவிகித இறக்கத்துடன் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும், 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், நிப்டி ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 0.79 சதவிகித ஏற்றத்துடனும், நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம் குறியீடு குறைந்தபட்சமாக 0.25 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,220 பங்குகளில் 1,383 ஏற்றத்துடனும், 1,727 இறக்கத்துடனும், 110 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏறுவதற்கு உண்டான டெக்னிக்கல் செட் அப் இருக்கிற போதிலும் அதற்கான சென்டிமென்ட் உருவாகாத நிலைமையே தென்படுகின்றது. செய்திகள் ஆதரவாக இருந்தால் மட்டுமே மேல் நோக்கிய பயணம் தொடர வாய்ப்புள்ளது. 26,200 என்ற லெவலை தாண்டி வால்யூமுடன் நடந்தால் மட்டுமே அடுத்தகட்ட மேல்நோக்கிய நகர்வை எதிர்பா ர்க்கலாம். நிப்டி பேங்க் ஆரம்பத்தில் ஏற்றத்தில் துவங்கிய நிப்டி பேங்க், நண்பகலுக்கு பின்னால் இறக்கத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 71 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. புல்லிஷாக இருக்கின்ற டெக்னிக்கல் சூழலே நிப்டி பேங்கில் நிலவுகிறது என்ற போதிலும் அவ்வப்போது சிறு சிறு இறக்கங்கள் வந்துபோக வாய்ப்புள்ளது. 59,200க்கும் கீழ் வால்யூமுடன் இறங்கினால் சற்று இறக்கம் வர வாய்ப்புள்ளது. நிப்டி 50 டாப் 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எட்டர்னல் 302.20 2.10 1,79,29,620 63.96 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 1,002.90 -4.70 1,67,46,566 62.18 ஐ.டி.சி., 404.05 -0.20 1,34,42,658 52.98 டாடா மோட்டார்ஸ் பாசெஞ்சர் வெகிக்கில்ஸ் 363.50 6.70 1,27,14,139 39.50 டாடா ஸ்டீல் 168.60 0.64 1,17,58,473 46.57 நிப்டி மிட்கேப் 50 டாப் 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) யெஸ் பேங்க் 22.47 -0.46 7,91,08,039 38.84 ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 107.67 -0.68 4,06,81,263 64.42 சுஸ்லான் எனர்ஜி 53.77 -0.24 3,31,70,385 44.36 என்.எம்.டி.சி., 75.45 1.53 2,49,97,800 46.83 அசோக்லேலண்ட் 160.40 2.28 2,49,89,252 36.65 நிப்டி ஸ்மால் கேப் 50 டாப் 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) இந்தியன் எனர்ஜி எக்சேன்ஞ்ச் 147.00 7.71 3,23,23,758 28.63 வொக்கார்ட் லிட்., 1,482.00 247.00 1,31,92,223 14.48 என்.பி.சி.சி., (இந்தியா) 117.79 1.10 69,89,299 32.17 பந்தன் பேங்க் 150.20 -0.16 69,06,158 66.40 நாட்கோ பார்மா 903.55 26.30 52,43,124 13.75 மேலும் சில பங்குகளின் புள்ளிவிபரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை எஞ்சினியர்ஸ் இந்தியா 196.41 39.09 9,03,973 கிரான்யூல்ஸ் இந்தியா 568.50 39.25 13,11,056 எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் 379.70 49.78 19,72,475 டாடா பவர் 390.40 37.46 34,20,680 பேங்க் ஆப் பரோடா 296.30 43.56 1,37,19,693 குறியீடுகள் குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 26,325.80 26,325.80 26,124.20 26,175.75 நிப்டி பேங்க் 60,102.05 60,114.30 59,527.60 59,681.35 ஆதரவு 26090 26005 25925 தடுப்பு 26290 26410 26480 ஆதரவு 59430 59180 58960 தடுப்பு 60020 60360 60580
1 hour(s) ago
8 hour(s) ago | 1
12 hour(s) ago | 16