உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வோடபோன் ஐடியா பங்கு விலை 8% உயர்வு

 வோடபோன் ஐடியா பங்கு விலை 8% உயர்வு

'வோ டபோன் குழுமம்' தனது வசம் உள்ள பங்குகளை 'வோடபோன் ஐடியா' நிறுவனத்திடமே ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, நேற்று அதன் பங்கு விலை 8 சதவீதத் திற்கும் மேல் உயர்ந்து 12.18 ரூபாயாக இருந்தது . இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் குழுமம், தற்போது அந்நிறுவனத்தில் 19 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை வோடபோன் ஐடியா நிறுவனத்திடமே திருப்பி அளிக்க வோடபோன் குழுமம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என்பதால், பங்கு விலை உயர்ந்திருப்பதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை