மேலும் செய்திகள்
தங்க பத்திர முதலீடு 264 சதவிகிதம் லாபம்
8 minutes ago
இந்த வாரம் எப்படி இருக்கும்?
14-Sep-2026
ஏஐ துறை குறியீடு என்எஸ்இ அறிமுகம்
14-Sep-2026
சந்தை விலை நிலவரம்
13-Sep-2026
எஸ்ஐபி முதலீட்டு வளர்ச்சி
13-Sep-2026
இ. பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அவசியமான தகவல்களையும் உடனுக்குடனான அறிவிப்புகளையும் பெறுவதற்காக, அதிகாரப்பூர்வ வாட்ஸ் -ஆப் சேனலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எது கிடைக்காது? இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்-ஆப் சேனல் வாயிலாக, பி.எப்., சேவைகள், புதிய விதிமுறை மாற்றங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ள முடியும். பிற இணையதளங்களை தேட வேண்டிய அவசியமின்றி, வாட்ஸாப்பிலேயே இத்தகவல்கள் கிடைக்கும். இருப்பினும், இது பொதுவான தகவல்களை வழங்கும் ஒரு தளம் மட்டுமே என்பதால், இதன் வாயிலாக தனிப்பட்ட கணக்கு இருப்பை சரிபார்ப்பதோ, முன்பணம் மற்றும் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பதோ முடியாது; மேலும் தனிப்பட்ட குறைகளை தீர்க்கும் உரையாடல் தளமாகவும் இதை பயன்படுத்த இயலாது. பணம் எடுக்கும் வசதி யு.பி.ஐ., வாயிலாக பி.எப்., கணக்கிலிருந்து நேரடியாக வங்கி கணக்கிற்கு பணம் எடுக்கும் வசதிக்கான சோதனைகள் நிறைவடைந்துள்ளன. இந்த வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இது தனித்துவமான திட்டமாகும்; புதிதாக தொடங்கப்பட்டுள்ள வாட்ஸ்-ஆப் சேனலுடன் இதை குழப்பிக்கொள்ள கூடாது. மேலும், வழக்கமான பாஸ்புக் விவரங்கள் மற்றும் பி.எப்., பணத்தை திரும்ப பெற அதிகாரப்பூர்வ 'உமங்' செ யலி அல்லது இ.பி.எப்.ஓ., போர்ட்டலை தொடர்ந்து பயன்படுத்துவதே பாதுகாப்பானது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . பாதுகாப்பு எச்சரிக்கை இ.பி.எப்.ஓ., பெயரில் உங்களை தொடர்புகொண்டு தனிப்பட்ட விபரங்கள் அல்லது ஓ.டி.பி., கேட்கும் போலி வாட்ஸ்- - அப் கணக்குகளை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ நீல நிற 'வெரிபைடு டிக்' உள்ள சேனலை மட்டுமே பின்பற்ற வேண்டும். தற்போதுவரை இந்த சேனலை கிட்டத்தட்ட 87,500 பேருக்கு மேல் பின் தொடர்கிறார்கள். இந்த படத்தில் உள்ள கியூ.ஆர்.,கோடை ஸ்கேன் செய்து இ.பி.எப்.ஓ., வாட்ஸ் -ஆப் சேனலில் இணையலாம்.
Gallery
8 minutes ago
14-Sep-2026
14-Sep-2026
13-Sep-2026
13-Sep-2026