உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தேசிய பங்கு சந்தையின் ஐ.பி.ஓ., யாருக்கு என்ன லாபம்?

 தேசிய பங்கு சந்தையின் ஐ.பி.ஓ., யாருக்கு என்ன லாபம்?

தேசிய பங்கு சந்தை 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா ஐ.பி.ஓ.,வை வெளியிட செபியிடம் அனுமதி கேட்டு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாக இது உருவெடுக்க உள்ளது. ஏற்கனவே 2016ஆம் ஆண்டிலேயே பங்கு வெளியீட்டுக்கு வர என்.எஸ்.இ., முயற்சி மேற்கொண்டிருந்தது. ஆனால், பல்வேறு சட்ட மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களால் அந்த முயற்சி தொடர்ந்து தாமதமானது.

இதன் காரணமாக, நீண்ட காலமாக முதலீடு செய்திருந்த பங்குதாரர்களின் முதலீட்டு மதிப்பு காகிதத்தில் மட்டுமே உயர்ந்த நிலையில் இருந்து, அதை பணமாக்க முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், தற்போதைய ஐ.பி.ஓ., அறிவிப்பானது, 30 ஆண்டுகளாக காத்திருந்த முதலீட்டாளர்களின் பொறுமைக்கும், சந்தை வளர்ச்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. என்.எஸ்.இ., முன்மொழிந்துள்ள இந்த ஐ.பி.ஓ., முழுதுமாக ஆபர் பார் சேல் அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது. இதன் வாயிலாக, என்.எஸ்.இ.,யின் 6 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த ஐ.பி.ஓ., 2024ஆம் ஆண்டு ஹூண்டாய் மோட்டார் இந்தியா வெளியிட்ட 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ., சாதனையை முறியடித்து, நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக பதிவாக உள்ளது. மேலும், தன்னாட்சி விதிமுறைகளின்படி ஒரு பங்கு சந்தை தன்னைத்தானே தனது தளத்தில் பட்டியலிட முடியாது என்பதால், என்.எஸ்.இ., பங்குகள் அதன் போட்டி நிறுவனமான மும்பை பங்கு சந்தை (பி.எஸ்.இ.,) தளத்தில் பட்டியலிடப்பட உள்ளன. எஸ்.பி.ஐ.,யின் லாபம் எவ்வளவு? இந்த ஐ.பி.ஓ., வெளியீட்டின் வாயிலாக மிகப்பெரிய பலனை பெறப்போவது எஸ்.பி.ஐ., வங்கி தான். கடந்த 1993 முதல் 1999 வரை என்.எஸ்.இ.,யின் தொடக்க காலத்தில், எஸ்.பி.ஐ., நிறுவனம் அதன் 2.47 கோடி பங்குகளை சராசரியாக வெறும் 80 காசு என்ற விலையில் வாங்கியிருந்தது. இதற்கான ஆரம்ப முதலீடு 1.98 கோடி ரூபாய் மட்டுமே. தற்போது பட்டியலிடப்படாத சந்தையில் நிலவும் இறுதி வர்த்தக விலையான 2,055 ரூபாயின் அடிப்படையில் கணக்கிட்டால், எஸ்.பி.ஐ., விற்க இருக்கும் பங்குகளின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 5,086.13 கோடி ரூபாயை தொடுகிறது. இது 2,568 மடங்கு அசுர வளர்ச்சியாகும் (சதவீத அடிப்படையில் 256,775% லாபம்). பங்குகளை விற்க மறுத்த எல்.ஐ.சி., என்.எஸ்.இ.,யின் 11 சதவீத பங்குகள் எல்.ஐ.சி.,யிடம் உள்ளன. 1992ம் ஆண்டிலேயே என்.எஸ்.இ.,யின் பங்குகளை முதன்முதலாக வாங்கிய நிறுவனங்களில் எல்.ஐ.சி.,யும் ஒன்று. இந்த மெகா ஐ.பி.ஓ.,வின் ஓ.எப்.எஸ்., விற்பனையில் பங்கேற்க போவதில்லை என்றும், தங்களின் மதிப்புமிக்க பங்குகளை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளப்போவதாகவும் எல்.ஐ.சி., அறிவித்துள்ளது. இதன்வாயிலாக, எதிர்காலத்தில் என்.எஸ்.இ.,யின் வளர்ச்சி தரும் லாபத்தை முழுமையாக பெற எல்.ஐ.சி., திட்டமிட்டுள்ளது. பிற நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம்: முதலீட்டு நிறுவனம் சராசரி கொள்முதல் விலை (ஒரு பங்கு) விற்பனை செய்ய உள்ள பங்குகள் எண்ணிக்கை எதிர்பார்க்கப்படும் லாப மடங்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 32 காசு பரிந்துரைக்கப்பட்ட அளவு 6,422 மடங்கு நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி 32 காசு பரிந்துரைக்கப்பட்ட அளவு 6,422 மடங்கு ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் 46 காசு 1.10 கோடி பங்குகள் 4,467 மடங்கு டெமாசெக் ஹோல்டிங்ஸ் சந்தை விலை 1.12 கோடி பங்குகள் 33 மடங்கு மோர்கன் ஸ்டான்லி சந்தை விலை பரிந்துரைக்கப்பட்ட அளவு 31 மடங்கு பங்குகள் ஒதுக்கீடு: தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 50% நிறுவனங்கள், ஹெச்.என்.ஐ., 15% சிறு முதலீட்டாளர்கள் 35%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை