நிப்டி ஸ்மால்கேப் பங்குகள் 20% அளவுக்கு சரிந்தது ஏன்?
கொரோனாவுக்கு பின், கடந்த 2020 முதல் 2024 வரை 'ஸ்மால் கேப்' நிறுவனங்களின் பங்குகள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. இந்த காலகட்டத்தில், 'நிப்டி 100 குறியீடு' 32 சதவீத உயர்வு கண்ட நிலையில், 'நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு' ஆண்டுக்கு 50 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது .வருவாய் வளர்ச்சி காரணமாக, ஸ்மால்கேப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு பன்மடங்கு வளர்ச்சி கண்டன. ஆனால், நிறுவனங்களின் வருவாய் சரிவை காண துவங்கிய நிலையில், தற்போது தவிர்க்க இயலாத வீழ்ச்சி கண்டுள்ளன.கடந்த 2025ல், நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு, 6 சதவீத சரிவை கண்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, ஸ்மால்கேப் பங்குகள் சிறிய சரிவை கண்டுள்ளன என்பது போல தோன்றும்.ஆனால், உண்மையில், இந்த குறியீட்டில் இடம்பெற்றுள்ள 250 நிறுவனங்களில், 200 நிறுவனங்கள், அதாவது 80 சதவீத நிறுவனங்களின் பங்குகள், உச்சபட்ச விலையில் இருந்து 20 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளன.