உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  உங்கள் பணம் உங்கள் கையில்

 உங்கள் பணம் உங்கள் கையில்

செபியின் 'ரன்னிங் அக்கவுன்ட்' விதிகளின்படி, பங்கு வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படாமல் புரோக்கர் கணக்கில் இருக்கும் முதலீட்டாளர்கள் பணம், அவர்களது வங்கி கணக்குகளுக்கு கட்டாயமாக திருப்பி அனுப்பப்படும். அதன்படி, முதல் காலாண்டில் முதலீட்டாளர்கள் கணக்குகளுக்கு ஏப்ரல் 17, 18ம் தேதிகளில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, முதலீட்டாளர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, செபியால் அமல்படுத்தப்பட்டதாகும். அதன்படி, பயன்படுத்தப்படாத முதலீட்டாளர் பணம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை (90 நாட்கள்) கட்டாயமாக அவர்களின் வங்கி கணக்குக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் மாதந்தோறும் (30 நாட்கள்) பணத்தை திரும்ப பெறவும் தேர்வு செய்யலாம். இந்த பணம் வரவு தொடர்பாக முதலீட்டாளர்கள் குறுஞ்செய்தி அல்லது இ - மெயில் அறிவிப்புகளை கவனித்து, அவர்களின் வங்கி கணக்கில் பணம் சரியாக வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை * வங்கி கணக்கு விபரங்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் * தேவையெனில் மாதாந்திர செட்டில்மென்ட் முறையை தேர்வு செய்யலாம் * ஒவ்வொரு முறை பணம் திரும்ப அனுப்பப்பட்ட பின், கணக்கு விபரங்களை சரிபார்க்க வேண்டும் * தேவையற்ற பணத்தை டிரேடிங் அக்கவுன்டில் வைத்திருக்காமல் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !