| ADDED : டிச 06, 2025 01:14 AM
உ லகளவில் ஆன்லைன் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வரும், கிளவுட்பிளேர் நிறுவனத்தின் இணையதள சேவைகள் நேற்று தற்காலிகமாக முடங்கியது. இதன் காரணமாக ஜீரோதா, ஏஞ்சல் ஒன், குரோ' உள்ளிட்ட தரகு நிறுவனங்களின் செயலிகளில், பயனர்கள் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். தரகு நிறுவனங்களின் செயலி மட்டுமின்றி, 'ஏ.ஐ., சாட்பாட், பெர்பிளக்ஸிட்டி, மேக் மை டிரிப்' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் செயலிகளும் முடங்கின. சமீபத்திய மாதங்களில், கிளவுட்பிளேர் சேவை முடங்குவது, இது இரண்டாவது முறை. இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தற்காலிக முடக்கத்தை உ டனடியாக சரி செய்து விட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.