மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
27-Feb-2025
புதுடில்லி:'டாப்ஸ்' எனும் பிராண்டு பெயரின் கீழ், ஊறுகாய் மற்றும் சாஸ் போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் 'ஜி.டி., புட்ஸ்' நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, அதானி வில்மர் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பங்குச்சந்தை தாக்கலில் இந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: ஜி.டி.,புட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கையகப்படுத்துதல் பல தவணைகளாக செயல்படுத்தப்படும்.முதல் தவணையில் 80 சதவீத பங்குகளும், மீதமுள்ள 20 சதவீத பங்குகள் அடுத்த மூன்று ஆண்டுகளிலும் கையகப்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது.சமையல் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டு வரும் அதானி வில்மர், தயார் உணவு வணிகத்தில் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.
27-Feb-2025