உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க இதை விட சிறந்த நேரம் அமையாது ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் புகழாரம்

இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க இதை விட சிறந்த நேரம் அமையாது ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் புகழாரம்

புதுடில்லி:இந்திய பொருளாதார வளர்ச்சியில், வர்த்தக வாய்ப்புகளை பெறுவதற்கான திட்டத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளின் சிறப்பான எதிர்காலத்துக்கான பாதைகளை அடையாளம் காணும் முயற்சி இது என, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தெரிவித்து உள்ளார். துாய எரிசக்தி, கல்வி மற்றும் திறன்கள், வேளாண் வர்த்தகம், சுற்றுலா ஆகிய நான்கு துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இந்தியாவின் வேகமாக வளர்ச்சியால் கிடைத்துள்ள முதலீட்டு வாய்ப்புகளை, ஆஸ்திரேலியா பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அந்நாட்டு பிரதமர் கூறினார். இந்தியாவுடன் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க, பிற நாடுகளுக்கு இதைவிட சிறந்த நேரம் அமையாது என்றும் ஆன்டனி அல்பனீஸ் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்புக்கான 50 குறிப்பிட்ட வாய்ப்புகளில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. ராணுவ தளவாட உற்பத்தி துறை, விளையாட்டு, கலாசாரம், விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்பம் ஆகியவை அதில் அடங்கும். இந்த திட்டத்தின் துவக்கமாக, ஆஸ்திரேலியா - இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு நிதியாக, 135 கோடி ரூபாய் முதலீட்டை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

நம்பிக்கை

இந்திய பொருளாதார வளர்ச்சி மீது வலிமையான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளது. அசாம் வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற உலக வங்கியின் இயக்குநர் அகஸ்ட் டனோ குயாமி, ''சிறிய அளவிலான வளர்ச்சி சரிவு நேரிட்டபோதிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறினார். ''ஒரு சதவீத ஏற்ற இறக்கங்கள், உலக வங்கியின் கருத்தை பாதிக்காது என்ற அவர், இந்திய பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே நீடிக்கும் என்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம்,'' என்றார்.

வர்த்தக வாய்ப்பு துறைகள்

* துாய எரிசக்தி * கல்வி மற்றும் திறன்கள் * வேளாண் வர்த்தகம் * சுற்றுலா ஆஸ்திரேலியா கவனம் செலுத்த உள்ளவை* ராணுவ தளவாட உற்பத்தி* விளையாட்டு * கலாசாரம் * விண்வெளி ஆராய்ச்சி * தொழில்நுட்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ