மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
புதுடில்லி:நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில் 5.20 சதவீதமாக சரிந்துள்ளது. எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். கடந்த மார்ச்சில், இந்த எட்டில், ஐந்து துறைகள் சரிவையோ, அல்லது குறைவான வளர்ச்சியையோ பதிவு செய்திருந்தது. அதிகபட்சமாக கச்சா எண்ணெய், இரண்டு சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இந்த எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த பிப்ரவரி மாதத்தில் 7.10 சதவீதமாகவும்; கடந்தாண்டு மார்ச்சில் 4.20 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், கடந்த 2022-23ம் நிதியாண்டில் 7.80 சதவீதமாக இருந்த முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த நிதியாண்டில் 7.50 சதவீதமாக சரிந்துள்ளது.நாட்டின் தொழில் துறை உற்பத்தியைக் கணக்கிடுவதில் இந்த 8 துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதால், மார்ச் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தியும் சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025