மேலும் செய்திகள்
நெட்ஒர்க் பிரச்னையால் மக்கள் பாதிப்பு
26-Aug-2024
புதுடில்லி:பொதுத்துறை தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 29 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுஉள்ளது.'ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா' ஆகிய தனியார் தொலைபேசி நிறுவனங்கள், கடந்த ஜூலையில் கட்டணங்களை 11 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தின. இதனால், 2 ஆண்டுகளாக தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வந்த பி.எஸ்.என்.எல்., ஜூலையில் மட்டும் 29 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் 7.40 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறிய நிலையில், தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வு, பி.எஸ்.என்.எல்.,க்கு ஜூலையில் சாதகமாக அமைந்தது.
26-Aug-2024