உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சூளகிரியில் 27 ஏக்கர் பரப்பில் வர்த்தக மையம் அமைகிறது

சூளகிரியில் 27 ஏக்கர் பரப்பில் வர்த்தக மையம் அமைகிறது

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த சூளகிரியில், 27 ஏக்கரில் வர்த்தக மையம் அமைக்க தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்து முக்கிய தொழில் நகரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் உருவெடுத்துள்ளது. அங்கு ஏற்கனவே வாகனங்கள், மின் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும், பல தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஓசூர் அருகில், 2,000 ஏக்கரில் ஓசூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த வசதியாக, ஓசூர் பன்னாட்டு வர்த்தக மையம், சூளகிரி சென்னப்பள்ளியில், 27 ஏக்கரில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது. இதன் திட்ட செலவு, 60 கோடி ரூபாய். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் இருப்பதை போல், அதிக இட வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. இந்த மையத்தில், ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நடத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ