திசையறியாமல் தள்ளாடிய சந்தை
நிப்டி: 24,487.40 மாற்றம்: 97.65 இறக்கம் சிவப்பு சென்செக்ஸ்: 80,235.59 மாற்றம்: 368.49 இறக்கம் சிவப்பு சரிவுக்கு காரணங்கள் * அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் வெளியேற துவங்கியது * வங்கித்துறை பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் வெளியேற துவங்கியதன் காரணமாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது லேசான இறக்கம் கண்டன. இருப்பினும், ஐ.டி.,துறை பங்குகள் எழுச்சியால், சற்று நேரத்தில் உயர்வுக்கு திரும்பின. தொடர்ந்து பணவீக்கம் தொடர்பான தரவுகளுக்காக காத்திருந்த முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனங்களின் பங்குகளை, வாங்குவதும், விற்பதும் தொடர்ந்ததால், நாள் முழுதும் நிப்டி, சென்செக்ஸ் திசையறியாமல் தள்ளாட்டத்துடன் வர்த்தகமாகின. வர்த்தகம் முடியவிருந்த கடைசி மணி நேரத்தில் வங்கி, நிதித்துறை பங்குகளை மளமளவென விற்கவே, சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன. உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் உயர்வுடனும்; தென் கொரியாவின் கோஸ்பி சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் கலவையாக வர்த்தகமாகின. https://x.com/dinamalarweb/status/1955473926810947597உயர்வு கண்ட பங்குகள் நிப்டி (%) டெக் மஹிந்திரா 2.03 மாருதி 1.98 ஹீரோ மோட்டோகார்ப் 1.79 சரிவு கண்ட பங்குகள் நிப்டி (%) பஜாஜ் பைனான்ஸ் 2.83 டிரென்ட் 1.39 ஹிந்துஸ்தான் யுனிலீவர் 1.37 அன்னிய முதலீடு அன்னிய முதலீட்டாளர்கள் ___ கோடி ரூபாய்க்கு பங்குகளை ___ இருந்தனர். கச்சா எண்ணெய் உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.18 சதவீதம் அதிகரித்து,66.75 அமெரிக்க டாலராக இருந்தது. ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பைசா 5 பைசா அதிகரித்து, 87.71 ரூபாயாக இருந்தது.