மேலும் செய்திகள்
ஏலத்தோட்ட தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை
17-Apr-2025
இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் ரொக்க புழக்கம் கடந்த நிதியாண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது என, 'சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ்' எனும் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விபரங்கள்: கடந்த நிதியாண்டில், நாட்டின் ஒவ்வொரு ஏ.டி.எம்.,ல் இருந்தும் சராசரியாக 1.30 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2016 - 17ம் நிதியாண்டில் 1.02 கோடி ரூபாயாக இருந்தது பிராந்திய வாரியாக பார்க்கும்போது, வட மாநிலங்களில் தான் ரொக்க புழக்கம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது கடந்த நிதியாண்டில் ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு 5,658 ரூபாயாக இருந்தது. இது கடந்த 2023 - 24 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 3 சதவீதம் அதிகமாகும் அதே நேரத்தில் கடந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் யு.பி.ஐ., பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு 8 சதவீதம் குறைந்து, 1,478 ரூபாயாக சரிந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,603 ரூபாயாக இருந்தது கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ரொக்க புழக்கம் 157 சதவீதமும்; வங்கி கிளைகள் 36 சதவீதமும்; ஏ.டி.எம்., எண்ணிக்கை 32 சதவீதமும் அதிகரித்துள்ளது கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களிடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் ரொக்கம் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது பீஹார், டில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ரொக்கத்துக்கான தேவை அதிகரித்து காணப்படுகிறது
மாநிலங்கள் வளர்ச்சி (%)பீஹார் 8%உத்தர பிரதேசம் 4 %டில்லி 4%ஹிமாச்சல் பிரதேசம் 3%சத்தீஸ்கர் 2%மேற்கு வங்கம் 2%மகாராஷ்டிரா 1%ஒடிசா 1%தமிழகம் 0%ஹரியானா 0%உத்தரகண்ட் 0%ஆந்திரா - 1% (மைனஸ்) கோவா - 1% (மைனஸ்)மத்திய பிரதேசம் - 2% (மைனஸ்)கர்நாடகா - 2% (மைனஸ்)பஞ்சாப் - 2% (மைனஸ்)ஜார்க்கண்ட் - 2% (மைனஸ்)ராஜஸ்தான் - 3% (மைனஸ்)ஜம்மு காஷ்மீர் - 3% (மைனஸ்)குஜராத் - 6% (மைனஸ்)அசாம் - 8% (மைனஸ்)கேரளா - 14% (மைனஸ்)மிசோரம் - 16% (மைனஸ்)திரிபுரா - 23% (மைனஸ்)
பீஹார் 8%டில்லி 4%உத்தர பிரதேசம் 4%ஹிமாச்சல் பிரதேசம் 3%சத்தீஸ்கர் 2%
17-Apr-2025