உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அரசு பத்திரங்கள் சொத்து மதிப்பு கணக்கீடு பற்றி கருத்து கூறலாம்

அரசு பத்திரங்கள் சொத்து மதிப்பு கணக்கீடு பற்றி கருத்து கூறலாம்

புதுடில்லி: ஓய்வூதிய திட்டங்களில் சேர்ந்துள்ள நீண்ட கால அரசு பத்திரங்களுக்கான நிகர சொத்து மதிப்பை கணக்கிடுவது தொடர்பான மாதிரி மதிப்பீட்டு முறையை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய ஓய்வூதிய திட்டம், அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றில், நீண்ட கால அரசு பத்திரங்களுக்கான நிகர சொத்து மதிப்பை கணக்கிட, வருவாய் ஈட்டுதல் மற்றும் சந்தை மதிப்பு ஆகிய இரட்டை மதிப்பீட்டு முறையை பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. சந்தாதாரர்களின் ஓய்வூதியம் நிலையானதாக இருப்பதோடு, எளிமையாகவும் அறிந்து கொள்ளுதல், குறுகிய கால வட்டி விகிதங்களால் நிகர சொத்து மதிப்பில் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிடுவதன் வாயிலாக பங்குதாரர்களின் நம்பிக்கையை அதிகரித்தல் ஆகியவை இதன் நோக்கம் ஆகும். இது குறித்து பொதுமக்கள், வரும் நவ.30 வரை தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ