உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.பி.ஓ., வரும் நிறுவனங்கள்

ஐ.பி.ஓ., வரும் நிறுவனங்கள்

டிரான்ஸ்ரயில் லைட்டிங் மின் வினியோக கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான 'டிரான்ஸ்ரயில் லைட்டிங்' புதிய பங்கு வெளியீடு வாயிலாக 400 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்நிறுவனம் தன் முதலீட்டாளர் வசமுள்ள 1.02 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. டிச., 19 - 23 வரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். டிச., 27ல் இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.மமதா மெஷினரி பேக்கேஜிங் துறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் குஜராத்தைச் சேர்ந்த 'மமதா மெஷினரி' புதிய பங்கு வெளியீடு வாயிலாக 179 கோடி ரூபாய் திரட்ட முன்வந்துள்ளது. இதற்காக, 74 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. பங்கு ஒன்றின் விலை 230 - -243 ரூபாய். டிச., 19 -- 23 வரை முதலீட்டாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். டிச., 27ல் இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், வி.எப்.எக்ஸ்., சேவைகளை வழங்கி வரும் மும்பையைச் சேர்ந்த 'ஐடெண்டிக்கல் பிரையன்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 19.95 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வருகிறது. 36.94 லட்சம் புதிய பங்குகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், பங்கு ஒன்றின் விலை 51- - 54 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. டிச., 17 -- 19 வரை, முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 2,000 பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.இதே போன்று, உ.பி., காசியாபாதைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான 'நாக்டாக் இன்ப்ராஸ்ட்ரக்சர்' 10.01 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது. டிச., 17 -- 19 வரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 33 - -35 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 4,000 பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். இது தவிர, வரும் வாரம், 'விஷால் மெகா மார்ட், சாய் லைப் சயின்சஸ் மற்றும் மொபிகுவிக் சிஸ்டம்ஸ்' உட்பட 12 நிறுவனங்களின் பங்குகள், சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ