நிறுவனங்கள் வரி செலுத்த நவ. , 15 வரை கெடு நீட்டிப்பு
புதுடில்லி:கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவ.,15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்கள், 2024--25ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய, அக்.,31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவ.,15 வரை, 15 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. அவகாசம் நீட்டிப்பிற்கான காரணத்தை வாரியம் குறிப்பிடவில்லை. எனினும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.