வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நவம்பர் 20 ம் தேதி வரை பங்கு சந்தை சரிவு இருக்கும் அதன் பிறகு நார்மல் ஆகும்
மேலும் செய்திகள்
மூன்றாவது நாளாக தொடரும் சரிவு
24-Oct-2024
•வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. சந்தை குறியீடுகள், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிவை கண்டன•நேற்றைய வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறுவது, நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு லாபம் சரிவு ஆகியவை காரணமாக, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. பங்குகளை விற்பதும் பெரியளவில் நடைபெறாமல், சுணக்க நிலை நீடித்தது•நிப்டி குறியீட்டில், தகவல் தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கிகள் தவிர்த்து, அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 4 சதவீதம் சரிவடைந்தன.சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 1,385 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 2,581 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 98 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,404 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.28 சதவீதம் குறைந்து, 74.66 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 5 பைசா சரிந்து 84.37 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை மஹிந்திரா & மஹிந்திரா டைட்டன் டெக் மஹிந்திரா நெஸ்லே இந்தியா இன்போசிஸ்அதிக இறக்கம் கண்டவை டிரென்ட் கோல் இந்தியா ஏசியன் பெயின்ட் டாடா ஸ்டீல் எஸ்.பி.ஐ.,
நவம்பர் 20 ம் தேதி வரை பங்கு சந்தை சரிவு இருக்கும் அதன் பிறகு நார்மல் ஆகும்
24-Oct-2024