உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டிஜிட்டல் கனெக்சன் நிறுவனம் தரவு மையம் திறப்பு

டிஜிட்டல் கனெக்சன் நிறுவனம் தரவு மையம் திறப்பு

சென்னை:'டிஜிட்டல் கனெக்சன்' என்ற நிறுவனத்தின் புதிய தரவு மையம், சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டிஜிட்டல் கனெக்சன் நிறுவனத்தின் சென்னை தரவு மையத்தின் துவக்க நிகழ்ச்சி, சி.இ.ஓ., வேலாயுதம் தலைமையில் நடந்தது. தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் மையத்தை திறந்து வைத்தார்.சென்னை அம்பத்துாரில், 10 ஏக்கர் நிலப்பரப்பில், 20 மெகாவாட் அளவுள்ள ஐ.டி., பணிகளை தாங்கும் அளவுக்கு, இம்மையத்தின் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம் மற்றும் 'புரூக்பீல்டு' நிறுவனங்களுடன் இணைந்து, இந்த தரவு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், 'வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த, சென்னை மாநகருக்கும், தமிழகத்துக்கும், இந்த மையம் மிகவும் உதவியாக இருக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை