உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மின்னணு கட்டமைப்பு 3 நாடுகள் உதவி

மின்னணு கட்டமைப்பு 3 நாடுகள் உதவி

வாஷிங்டன்:இந்தியாவில் மின்னணு கட்டமைப்புக்கு, இந்திய தனியார் துறையுடன் இணைந்து ஆதரவளிப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாக, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் அறிவித்துஉள்ளன.அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம், ஜப்பான் சர்வதேச வங்கி மற்றும் கொரியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகியவை இணைந்து இதை தெரிவித்துள்ளன. 5ஜி, ஓபன் ஆர்.ஏ.என்., கடலுக்கடியில் கேபிள், கண்ணாடி இழை நெட்வொர்க், தொலைத்தொடர்பு கோபுரங்கள், தகவல் சேமிப்பக மையங்கள், ஸ்மார்ட் சிட்டி, இ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகிய பிரிவுகளில் இந்நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும். இதற்கான ஒப்பந்தத்தில் டி.எப்.சி., தலைமை அதிகாரி, ஜே.பி.ஐ.சி., கொரியாவின் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத் தலைவர் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ